வங்காள விரிகுடாவில் இரண்டு தாழமுக்கங்கள் உருவாகும். புவியியல் துறையின் தலைவர் நா.பிரதீபராஜா தெரிவிப்பு
4 weeks ago
வங்காள விரிகுடாவில் இந்த மாதம் மேலும் இரண்டு தாழமுக்கங்கள் உருவாகுவதற்குச் சாத்தியம் உள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
வங்காள விரிகுடாவில் இந்த மாதம் மேலும் இரண்டு தாழமுக்கங்கள் உருவாகுவதற்குச் சாத்தியம் காணப்படுகின்றது.
எதிர்வரும் 13 ஆம் திகதி ஒரு தாழமுக்கமும், எதிர்வரும் 20ஆம் திகதி மற்றொரு தாழமுக்கமும் உருவாகவுள்ளன.
இவை இரண்டும் வடக்கு, வடமேற்குத் திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது.
இவையும் இலங்கைக்குக் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அண்மித்து வர வாய்ப்புண்டு.
இவை பற்றிய மேலதிக விவரங்கள் விரைவில் அறியத் தரப்படும் என்றார்.