நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த முடியாது- நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்.
சர்வதேச நாணயத்துடனான நாணய ஒப்பந்தத்தில் மாற்றங் களை ஏற்படுத்த முடியாதென, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட் டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்- ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் போலியான வாக்கு றுதிகளை வழங்கி வருகின்றன. தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக அவர்கள் இவ் வாறு செயற்படுகின்றனர்.
நீண்டகால திட்டமிடலின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். அதன் அடிப்படையிலேயே எமக்கு நிதி உதவி கிடைக்கப்பெற்றது.
நாட்டில் எரிபொருள், எரிவாயுவுக்கு நீண்டவரிசை காணப்பட்டமையை மக்கள் மறக்கமாட்டார்கள். அவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடியை ஓரிரு நாட்களிலோ அல்லது, ஓரிரு வாரங்களிலோ தீர்க்க முடியாது. பொருளாதார பிரச்சினையிலிருந்து மீள்வதற்கு இரண்டு வரு டங்களுக்கு மேலான காலம் தேவைப்பட்டது. அவ்வாறு மீள்வ தற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியே காரணமாக அமைந்தது.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் மாற் றங்களை ஏற்படுத்தப் போவதாக சஜித்தும் அநுரவும் தேர்தல் மேடை களில் பேசி வருகின்றனர். அவ்வாறு செய்ய முடியாதென்பதை திட்டவட்டமாக தெரிவித்து கொள்கிறோம் என்றார்.