பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்!!

6 months ago

கடந்த வருடத்தில், ஏனைய அனைத்து ஊழியர்களின் சம்பளத்துக்கு செலவிடப்பட்ட தொகையை விட சமமான தொகை பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளின் சம்பளத்துக்காக அரசாங்கம் செலவிட்ட தொகை அதிகம் என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகளில் தெரியவந்துள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய துறை ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 32 ஆயிரத்து 729 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. ஆயுதப்படை மற்றும் பொலிஸாரின் சம்பளத்துக்காக 31 ஆயிரத்து 200 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட சம்பளம் அரச சேவையின் சம்பளத்தில், 33 வீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களில் பாதுகாப்பு படையினரின் சம்பளத்துக்காக செலவிடப்பட்ட தொகை 17 வீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் முப்படையினருக்கான சம்பளம் வழங்குவதற்காக 21 ஆயிரத்து 787 கோடி ரூபாவும், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினருக்கு சம்பளம் வழங்குவதற்காக 9 ஆயிரத்து 413 கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது என்றும் பேராசிரியர் வசந்த அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.