யாழ். மாவட்டத்தில் 0.04 வீதமான நிலமே அரசாங்கத்துக்குத் தேவை - யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க தெரிவிப்பு
7 months ago
யாழ். மாவட்டத்தில் 0.04 வீதமான நிலமே அரசாங்கத்துக்குத் தேவையாக உள்ளதாக யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பலாலிச் சந்தியில் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் இராணுவத்தினரால் பலநோக்குக் கட்டடமொன்று கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காணி விடுவிப்புத் தொடர்பாக மாவட்டச் செயலரும், அரசாங்கமும் கலந்துரையாடித் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.