இலங்கை ஜனாதியுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விஜயம்
3 months ago
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என தெரிய வருகின்றது.
எதிர்வரும் 4ஆம் திகதி அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
முன்னதாக அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை ஜெய்சங்கர் அவரை சந்தித்திருந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின் போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள் குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.