இலங்கையில் ஆகஸ்ட் 15 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகம் அமைந்துள்ள பிரதேசம் பாதுகாப்பு வலயமாக அறிவிப்பு.
8 months ago

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகம் அமைந்துள்ள சரண மாவத்தையைச் சுற்றியுள்ள பகுதி விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய தினம் மக்கள் வேலைக்காகவோ அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக அந்தப் பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இதேவேளை, நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 320 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
