யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலையில் 50 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை

5 months ago




யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும்                      திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்தத் திணைக்களம் மேலும்                  குறிப்பிட்டுள்ளது.