

ஜப்பானின் தொலைதூர தீவான இசு தீவுகளுக்கு அருகே 5. 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து செவ்வாய்க்கிழமை சிறியளவில் சுனாமி தாக்கியது.
பூகம்பம் ஏற்பட்டு 40 நிமிடங்களுக்கு பின்பு 50 சென்ரி மீற்றர் (1.6 அடி) உயரம் கொண்ட சுனாமி அலை இசு தீவுகளை அடைந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அங்கு பூகம்பம் மற்றும் சுனாமியால் எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை.
கடல் மட்டத்திலிருந்து ஒரு மீற்றர் வரை அலைகள் உயரும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகள், சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
