புத்தளம், சிலாபம் ஹோட்டலில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த 10 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது

2 months ago



புத்தளம், சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணவில் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த 10 வெளிநாட்டுப் பிரஜைகள் நேற்று (15) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

04 மலேசியப் பிரஜைகளும், ஒரு பெண் உட்பட 4 எத்தியோப்பியா பிரஜைகளும், கென்யா நாட்டுப் பெண்ணும், சீனப் பிரஜை ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 20 கணினிகளும், 282 கையடக்கத் தொலைபேசிகளும், 03 ரவ்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


அண்மைய பதிவுகள்