நண்பிக்கு வங்கியில் பணம் பெற்றுக் கொடுத்தவர் கடனை செலுத்தாத நிலையில் உயிர் மாய்ப்பு
தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்றுக் கொடுத்த பணத்தினை மீள செலுத்த முடியாதமையால் மன முடைந்த குடும்ப பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த் துள்ளார்.
யாழ்ப்பாணம், அல்வாய்ப் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். உறவு முறையான இரு பெண்களுக்கு இடையில் நீண்ட கால நட்பு இருந்து வந்துள்ளது.
அதில் ஒரு பெண் பண கஷ்டத்தில் இருந்த போது மற்றைய பெண் வங்கியில் பெருந்தொகை பணத் தினைக் கடனாக பெற்று, தனது நண்பிக்கு பண உதவி செய்துள்ளார்.
பண உதவியை பெற்றுக்கொண்ட பெண் பணத்தினை மீள செலுத் தாத நிலையில், வங்கியில் கடன் பெற்ற பெண் பண நெருக்கடிக்கு ஆளாகி, மனவுளைச்சலில் காணப் பட்டுள்ளார்.
இந்நிலையில் நண்பியின் பெயரை முகநூலில் பதிவிட்டு, தனது மரணத் திற்கு காரணம் இவர் தான் என்றும் இவரால் தான் தனது மூன்று பிள்ளைகளையும் அநாதையாக விட்டுச் செல்வதாக பதிவிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
