இந்தியா டில்லியில் காற்றின் தரக்குறியீட்டின் பாதிப்பால் நேற்று மட்டும் 150 இற்கும் மேற்பட்ட விமானங்களும் சுமார் 26 ரயில் சேவைகள் பாதிப்பு
3 hours ago
இந்தியா டில்லியில் காற்றின் தரக்குறியீட்டின் பாதிப்பால் நேற்று மட்டும் 150 இற்கும் மேற்பட்ட விமானங்களும் சுமார் 26 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறதுடன் குறிப்பாக வட இந்தியாவில் இந்த காலத்தில் கடும் குளிரும், பனிப்பொழிவும் நிலவி வருகிறது.
அதன்படி, வட இந்தியாவில் இப்போது குளிர்காலம் நிலவி வருவதால் அங்குக் கடுமையான மூடுபனி நிலவுகிறது.
இதனால் டில்லியில் நேற்று மட்டும் 150 இற்கும் மேற்பட்ட விமானங்களும் சுமார் 26 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, டில்லியில் காற்றின் தரக்குறியீடு நேற்று காலை 6 மணி அளவில் 408 ஆக பதிவாகியுள்ளதுடன் இது மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கூற்றுபடி, மிகவும் மோசமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.