யாழ்.காரைநகர் வலந்தலை மடத்துகரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் 83 யூலை நினைவுகூரப்பட்டது.
5 months ago
யாழ்.காரைநகர் வலந்தலை மடத்துகரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது 1983 ஆம் ஆண்டு யூலை மாதமளவில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூறி பொது சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு மலரஞ்சலிய் செலுத்தப்பட்டது .
இதன் பொழுது காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் ஆ.விஜயராஜா ,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான தவமணி , ஜெயந்தன்,நாகராஜா , இலங்கை தமிழரசு கட்சியின் காரைநகர் மூலக்கிளையினர் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.