ஸ்ரீ தலதா மாளிகைக்குள் திருமணத்திற்கு முன்னரான படப்பிடிப்பு நடத்திய சம்பவம் தொடர்பில் தம்பதிகளிடம் பொலிஸார் விசாணை.
7 months ago

வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்குள் அண்மையில் திருமணமான தம்பதியொன்று திருமணத்திற்கு முன்னரான படப்பிடிப்பு நடத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம் பித்துள்ளனர்.
தலத்தில் உள்ள ஹெவிசி மண்டபம் மற்றும் அம்பராவா உள்ளிட்ட பல்வேறு இடங்க ளில் இந்த ஜோடி புகைப்படம் எடுக்கப்பட்ட சம்பவம், சமூக ஊடகங்களில் கடுமையான விவாதத்தைத் தூண்டியுள்ளது.
ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல (பிரதான பரிபாலன பொறுப்பாளர்), சம்பவம் தொடர்பில் தனக்குத் தெரியப்படுத்தியதாகவும், பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் உறுதிப்படுத்தினார். இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக புகைப்படக் கலை ஞருடன் தம்பதியினர் கண்டிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
