கனடாவின் ரொறன்ரோவில் இரண்டு பெண்களைக் கடத்திய நபர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2 months ago




கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வைத்து இரண்டு பெண்களைக் கடத்திய நபர் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நபர் மேலும் பெண்களை கடத்தி இருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

37 வயதான மார்க்கஸ் மோசஸ் என்ற நபரை இவ்வாறு சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பீல் மற்றும் ஹால்டன் பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் தெரியாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்தி சந்தேக நபர் பணம் ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபருக்கு எதிராக 26 குற்றவியல் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.