வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான சீனாவின் அரிசியும் வந்து சேர்ந்தது

6 months ago


வடக்கு - கிழக்கு மீனவர்களிற்கான சீனாவின் பொருத்து வீடுகளைத் தொடர்ந்து அரிசியும் நேற்று மாவட்டங்களிற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

சீன அரசினால் வடக்கு - கிழக்கு மீனவர்களிற்காக வழங்கப்பட்ட 500 பொருத்து வீடுகள் அடங்கிய பெட்டிகள் கெண்டெயினர்கள் மூலம் ஏற்கனவே எடுத்து வரப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து 50 கிலோவாக பொதி செய்யப்பட்ட அரிசியும் நேற்று முதல் எடுத்து வரப்படுகின்றது. இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு ஒதுக்கிய 7 ஆயிரத்து 436 மூடைகளில் 2 ஆயிரத்து 200 மூடை அரசி நேற்று எடுத்து வரப்பட்டு குருநகரில் களஞ் சியப்படுத்தப்பட்டது.

இவ்வாறு களஞ்சியப்படுத்தப்படும் அரிசியுடன் ஏனைய அரிசிகளும் மாவட்டத்திற்கு கிடைத்தவுடன் எதிர் வரும் 13ஆம் திகதி இவை மீனவர்களிற்கு வழங்கப்படவுள்ளது.