இலங்கை முன்னாள் எம்.பிகளுக்குரிய ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படவுள்ளது.-- ஜனாதிபதி தெரிவிப்பு

3 months ago



நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் வெகுவிரைவில் இரத்துச் செய்யப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படவுள்ளது.

அத்துடன், இனிவரும் நாள்களில் நாடாளுமன்ற உணவகத்தில் சலுகை விலையில் உணவுகள் வழங்கப்படாது.

வெளியில் என்ன விலைக்கு பொதுமக்களுக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றனவோ, அதே விலைக்குத்தான் நாடாளுமன்ற உணவகங்களிலும் உணவுகளைப் பெறக்கூடியதாக இருக்கும் - என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகங்களில் மானிய விலையிலேயே இதுவரை உணவு வழங்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.