வடமாகாண சுற்றுலாத் துறையில் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கிய உள்ளூராட்சி சபைக்கான விருது பூநகரி பிரதேச சபைக்கு

1 week ago



வடக்கு மாகாண சுற்றுலாத் துறையில் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கிய உள்ளூராட்சி சபைக்கான விருது பூநகரி பிரதேச சபைக்கு வழங்கி வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் குறித்த விருது வழங்கப்பட்டது.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் விருதை வழங்கிவைக்க பூநகரி பிரதேச சபை செயலாளர் இரட்ணம் தயாபரன் பெற்றுக்கொண்டார்.