முல்லைத்தீவில் யுக்திய நடவடிக்கையில் 7 பேர் கைது

6 months ago

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடத்திய 'யுக்திய' சுற்றிவளைப்பில் பல குற்றங்களுடன் தொடர்புபட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 9ஆம், 10ஆம் வட்டார பகுதிகளில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையிலான பொலிஸார், இராணுவத்துடன் இணைந்து இன்று (04) அதிகாலை 5 மணி தொடக்கம் 6 மணி வரை சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

இந்த சுற்றிவளைப்பின்போது திறந்த பிடியாணை நபர்கள் இருவர், பொலிஸாரினால் ஒருநாள் பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேர், திருகோணமலையை சேர்ந்த பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் என 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேக நபர்களிடமிருந்து 43 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


அண்மைய பதிவுகள்