இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் யுவதி ஒருவர் இரு தமிழ்க் கட்சி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
2 months ago
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் வேட்பாளராக பெயரிடப்பட்ட யுவதி இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
தலைமன்னாரைச் சேர்ந்த குறித்த யுவதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார்.
அண்மை நாட்களாக அவர் அந்தக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இது தொடர்பில் விளம்பரப் படங்களை தயாரித்து பேஸ்புக்கில் பதிவிட்டும் வந்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வன்னி தேர்தல் மாவட்டத்தில் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தது.
அந்த வேட்புமனுவிலும் குறித்த யுவதி கையொப்பமிட்டுள்ளதுடன், வேட்புமனுவும் தாக்கல் செய் துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.