இந்தியாவிலிருந்து கடலால் கொண்டு வரப்பட்ட பறவைகள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் மூவர் கைது

2 months ago



இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகக் கொண்டு வரப்பட்ட பறவைகள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் மூவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் கரிசல் பகுதியில் பறவைகள் மற்றும் மரஅணில்களை வாகனத்தில் ஏற்றும்போது நேற்று புதன்கிழமை அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையின் புலனாய்வு அதிகாரிகளுக்குத் கிடைத்த தகவலுக்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதன் போது 220 புறாக்கள், 20 ஆபிரிக்க கிளிகள், 8 மர அணில்கள், பறவைகளுக்கான மருந்துப் பொருட்கள் மற்றும் பாதாம், பிஸ்தா போன்றவையும் இதன் போது கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், அவர்களிடம் இருந்த பறவைகள் மற்றும் மர அணில்கள், மருந்துப் பொருட்கள் அனைத்தையும் மன்னார் பொலிஸ் நிலலையத்தில் ஒப்படைத்துள்ளதாகக் கடற்படையினர் மேலும் கூறினர்.