வில் மூலம் ஊடகவியலாளரின் மனைவி, பிள்ளைகள் கொலை பிரிட்டனில் அதிர்ச்சி சம்பவம்

5 months ago


பி. பி. சி. ஊடகவியலாளரின் (வர்ணணையாளர்) மனைவியும் இரண்டு மகள்களும் குறுக்கு வில் பயன்படுத்தி கொல்லப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹேர்ட் போர்சையரில் உள்ள புசே என்ற பகுதியில் அவர்களது வீட்டுக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

பி. பி. சியின் ஊடகவியலாளர் ஜோன் ஹன்ட் தனது வீட்டுக்குச் சென்ற வேளை தனது மனைவியும் இரண்டு பிள்ளைகளும் தாக்குதலில் காயமடைந்த நிலையில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்ததை அவதா னித்துள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்கள் காயங்கள் காரணமாக உயிரிழந்தனர்.

அவர்கள் குறுக்கு வில் தாக் குதலினால் கொல்லப்பட்டிருக் கலாம் என பொலிஸார் தெரி வித்தனர்.

கொலை இடம்பெற்ற பகுதிக்கு அருகில் நபர் ஒருவர் பாரியபொருள் ஒன்றுடன் நடமாடும் சி. சி. ரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பல மணிநேர தேடுதல் நட வடிக்கையின் பின்னர் 26 வயது நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார்,

குறுக்கு வில் பயன்படுத்தியே இந்தத் தாக்குதல் இடம் பெற்றிருக்கலாம் எனக் கூறினர். ஏனைய ஆயுதங்களையும் சந் தேகநபர் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

லண்டனுக்கு வடக்கே உள்ள என்பீல்ட் பகுதியில் குறுக்கு வில்லுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காயங் களுக்காக சிகிச்சை பெறுகின்றார். கொல்லப்பட்டவர்களை அவருக்கு நன்கு தெரியும் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் பிரிட்டிஷ் இராணுவத்தில் சில காலம் பணியாற்றியவர் என்ற விபரம் வெளியாகியுள்ளது. 2019 இல் இராணுவத்தில் பணியாற்றியவர் என்று பொலி ஸார் கூறினர்.

இந்தக் கொலைகள் பிரிட்டனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.