விடுதலைப் புலிகள் புதைத்து வைத்தனர் என்று கூறப்படும் ஆயுதங்கள் - தங் கத்தைத் தேடிய சிப்பாய் உட்பட மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப் படையின் யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோய் சுமணவர்த்தன தலைமையில் மன்னார் முகாம் கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகரின் பரிந்துரைக்கமைய மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்பாடு வீதி, தாராபுரம் பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குருநாகலைச் சேர்ந்த 49வயதான சிப்பாய், வவுனியாவைச் சேர்ந்த 29 வயது நபர், அநுராதபுரத்தைச் சேர்ந்த 62 வயது நபர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் மடிக் கணினி, ஸ்கானர் இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.