அநுரகுமாரவின் அரசாங்கம் மூன்று மாதங்கள் நீடிக்கும் என்று மக்கள் கூறுகின்றனர். நான் கூறவில்லை. -- ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

2 months ago




அநுரகுமாரவின் அரசாங்கம் மூன்று மாதங்கள் நீடிக்கும் என்று மக்கள் கூறுகின்றனர். நான் கூறவில்லை.

ஆனால், அவரின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால் மூன்று மாதங்களல்ல, மூன்று வாரங்கள் கூட நீடிக்காது - என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணி சார்பில் நேற்று நீர்கொழும்பில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேசியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"தேர்தலில் தோல்வியடைந்தால் என்னை வீட்டிலிருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனக்கு பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆனால் அவருக்கும் பெரும்பான்மை 51 சதவீதம் வழங்கப்படவில்லை. அவருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?

நான் பெரும்பான்மை இல்லாத    முன்னாள் ஜனாதிபதி. அநுரகுமார பெரும்பான்மை இல்லாத தற்போதைய ஜனாதிபதி.

நான் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கோருவதற்காக உங்கள் முன்னால் வந்துள்ளேன்.

நாடு வீழ்ச்சியடைந்தபோது பொறுப்பேற்க எவரும் இருக்கவில்லை. சஜித்தும் இல்லை - அநுரவும் இல்லை. பிரதமராவதற்கு எவரும் இருக்கவில்லை.

ஒருநாள் நிமால் லான்சா பிரதமராக தயாரா என்று என்னிடம் கேட்டார் நான் எப்படி என வினவினேன்.

அதற்கு அவர் அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் - என்றார்.

அதன் பின்னர் நான் ஜனாதிபதியை சந்திக்கச் சென்று சவாலை ஏற்றுக் கொண்டேன்.

அந்த சமயம் ஜனாதிபதி பதவியைத் துறந்தவேளை பாராளுமன்றம் சுற்றி வளைக்கப்பட்ட வேளை எவரும் இருக்கவில்லை.

தற்போது தலைமைத்துவத்தை கோரும் அனைவரும் தப்பியோடினார்கள்.

நாங்கள் இராணுவத்தைப் பயன்படுத்தி இந்த நாட்டை காப்பாற்றினோம்.

அநுரகுமார திஸநாயக்க மூன்று மாதங்களுக்கே பதவி வகிப்பார் என மக்கள் தெரிவிக்கின்றனர் -

நான் அவ்வாறு தெரிவிக்கவில்லை.

அவர் தனது பதவியைத் தொடரவேண்டும். அவரின் கட்சியிலிருந்து அரசியல் குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்படுமா தெரியாது. அவ்வாறான விடயங்களை செய்யக் கூடாது.

ஆனால், அவர்களின் பட்டியலைப் பார்த்தால் இந்த அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்கும் என நான் நினைக்கவில்லை - மூன்று வாரங் கள் கூட நீடிக்காது.

ஆகவே, நாட்டுக்குத் தலைமை

தாங்ககூடியவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். ஆகவே, நாட்டுக்குத் தலைமை தாங்க கூடியவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

அனுபவசாலிகள் பாராளுமன்றத்தில் இருந்தால் ஜனாதிபதியால் மூன்று வருடங்கள் ஆட்சி செய்ய முடியும்.

அவ்வாறான சூழ்நிலை காணப்படாவிட்டால் நாட்டில் வரிசைகள்யுகம் உருவாகும்.

தற்போதைய தேங்காய் வரிசைகளுக்குப் பதில் புதிய வரிசைகள் உருவாகும் -என்றார்.