இலங்கையில் ஆண்கள் புகைப்பிடிக்கும் வீதம் குறைவடைந்துள்ள நிலையில், பெண்களிடையே அதிகரித்து வருகிறது.

ஆண்கள் புகைப்பிடிக்கும் வீதம் குறைவடைந்துள்ள நிலையில், பெண்களிடையே அதிகரித்து வருகிறது.
இதனால் இளம் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சிறுவர் சுவாச நோய் வைத்திய நிபுணர் சான டி சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எமது உடலில் சுவாச அமைப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில், மனிதர்கள் உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் பல நாட்கள் வாழ முடியும்.
ஆனால், சுவாசிக்காமல் வாழ முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சுவாச நோய்ப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமன் மலி தல் பதடு தெரிவிக்கையில்- உலகளவில் இறப்புக்கான ஏழாவது முக்கிய காரணியாக நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் உள்ளது.
இந்த நோய் நிலைமை தொடர்பில் சமூகத்தில் சரியான விழிப்புணர்வு இல்லை.
இந்த நோய் பல தசாப்தங்களாக கவனிக்கப்படாமல் சிகிச்சை அளிக்கப்படாத அஸ்மா அல்லது புகைபிடித்தல் காரணமாக ஏற்படுகிறது.
மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் பொதுவாக 45 வயதுக்குப் பின்னர் ஏற்படும்.
நாட்டில் 40 வயதுக்கு மேற்பட்ட 10 வீதம் பேர் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2017ஆம் ஆண்டு ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு குறைந்தளவிலான விழிப்புணர்வே காரணமாகும். -என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
