முப்படையினரின் வசம் மக்களின் காணிகள் இருக்குமாயின் தகவல்களை அறியத்தருக.-- முரளிதரன் கோரிக்கை

முப்படையினரின் வசம் தங்களின் காணிகள் இருக்குமாயின் அது குறித்த உரிய தகவல்களை அறியத்தருமாறு வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
முப்படையினரின் வசம் உள்ள காணிகளை மக்களுக்காக விடுவிப்பதற்கு படைகளின் ஆளணித்துவத்தை குறைக்க வேண்டும்.
வடக்கு மக்களுக்கு நாங்கள் தெரிவிப்பதாவது, உங்களுடைய சொந்த காணிக்குள் இராணுவ படைமுகாம் இருக்குமாயின் எமக்கு தகவல் தாருங்கள்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
மேலும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் காணி அமைச்சரை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு மேற்கொண்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, உரிய தரவுகள் இருக்குமாயின் எமக்கு காணி பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பில் கலந்துரையாடுவோம் - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
