அமோசன் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் மற்றும் லாரன் சாஞ்சஸ் திருமணத்திற்கு ஆகும் செலவு ரூ.5 ஆயிரம் கோடி

2 weeks ago



அமோசன் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் மற்றும் லாரன் சாஞ்சஸ் இடையேயான திருமணத்திற்கு ஆகும் செலவு    ரூ.5 ஆயிரம் கோடி என பத்திரிகை ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

ஜெப் பெசோஸ் லாரன் சாஞ்சஸ் என்பவரை 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் டேட்டிங் செய்து வருகிறார்.

இந்த நிலையில், இவர்கள் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்து, கடந்த ஆண்டு மே மாதம் நிச்சயமும் நடந்து முடிந்துள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்வருகிற 28-ம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, இந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள இருக்கும் தகவல் வெளியானது.

கொலராடோ மாகாணத்தின் ஆஸ்பன் நகரில் நடைபெற உள்ள இவர்களுடைய திருமணத்திற்கு ஆகும் செலவு ரூ.5 ஆயிரம் கோடி (600 மில்லியன் டொலர்கள்) என பத்திரிகை ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டது,

இதனைப் பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இவ்வளவு செலவு செய்து திருமணம் செய்கிறார்களா? என பலருக்கும் வியப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பெசோஸ் அதற்கான விளக்கம் அளித்துள்ளார். இந்த செய்தி முற்றிலும் பொய்யானது என தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் தெரிவித்துள்ளார்.