ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். வெரிட்டே ரிசேர்ச் ஆய்வில் தெரிவிப்பு

1 month ago



தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் அரச துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவுள்ளது என வெரிட்டே ரிசேர்ச் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் மொத்த தொழில் படையான 8 மில்லியனில் 1. 16 மில்லியன் பேர் அதாவது 15 வீதமானோர் மத்திய அரசாங்கம். துணைத் தேசிய அலகுகள் மற்றும் இராணுவம் உட்பட அரச துறையில் பணிபுரிந்துள்ளனர்.

குறிப்பாக, மொத்த அரச உத்தியோகத்தர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகின்றனர..

பிராந்தியத்தில் உள்ள ஒரே மாதிரியான பொருளாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளில் மிகக் குறைவான அரச உத்தியோகத்தர்களே பணிபுரிகின்றனர்.

தமது தொழில் படையில் இந்தியா வீதமும் வியட்நாம் 8 வீதமும் பங்களாதேஷ் 5 வீத உத்தியோகத்தர்களை மட்டுமே அரச துறையில் பயன்படுத்துகின்றன.

அரச துறைக்கு குறைந்த ஊதியம் வழங்கப்பட்டாலும். இதன் காரணமாக அதிக செலவு ஏற்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் 940 பில்லியன் ரூபாயை அதன் மீண்டெழும் வரவு - செலவு திட்டத்தில் 20 வீதத்தையும் அதன் வருமானத்தில் 31 வீதத்தையும்    அரச துறையினருக்கு சம்பளங்களுக்காகச்.    செலவிட்டுள்ளது.

கடந்த தசாப்தத்தில் அரச செலவினத்தில் சராசரியாக 23 வீதம் சம்பளங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளதுடன்                  சுகாதாரம், கல்வி மற்றும் உட் கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளுக்கு வரையறுக்கப்பட்ட நிதியே எஞ்சியுள்ளமை அந்த ஆய்வு மூலம் வெளிப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்