இந்தியா கொல்கத்தா மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் நேற்று இரவு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்தியா கொல்கத்தா அரச மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று இரவு ஆர்ப்பாட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.
ரீக்லைட் என்ற பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.
பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து கடந்த ஒரு வார காலமாக கொல்கத்தாவில் ஆர்ப்பாட்ட பேரணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களின் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோள்களைத் தொடர்ந்து சமூகத்தின் அனைத்து தரப்பையும் சேர்ந்த பெண்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதாக பிபிசி தெரிவித்துள்ளது.
இதேவேளை கொல்கத்தாவில் பொலிஸாருக்கும் சிறிய குழுவினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளன.
சிலரின் கரங்களில் தேசிய கொடி காணப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆண்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் நீதி வேண்டும் என கோசமிட்டதுடன் சங்கொலியை எழுப்பியுள்ளனர்.
இரவு 12 மணியானதும் இந்தியாவின் சுதந்திர பிறப்பை குறிக்கும் விதத்தில ஆர்ப்பாட்டத்தின் போக்கு மாறியுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்திய தேசிய கீதத்தை இசைத்தனர்.
அதன் பின்னர் கடும் மழையிலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
கொல்கத்தாவில் நாங்கள் இவ்வாறு பெருமளவு பெணகள் அணிவகுத்தை பார்த்ததில்லை என செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவின் பின்னர் தனது 13 வயது மகளுடன் கலந்துகொண்ட பெண் ஒருவர் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மூலம் நிலைமையை சரிசெய்ய முடியுமா என மகள் பார்க்கட்டும், அவள் தனது உரிமைகள் குறித்து விழிப்புணர்வை பெறட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பெண்களிற்கு மதிப்பில்லை நாங்கள் கால்நடைகளை விட மதிப்பற்றவர்கள் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.