இராணுவ ஹெலியுடன் மோதி ஆற்றில் விழுந்த அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 67 பேரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்


அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டருடன் மோதி ஆற்றில் விழுந்து நொருங்கிய அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 67 பேரும் உயிரிழந்திருக்கலாம்என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும் துயரத்தில் சிக்குண்டுள்ள குடும்பங்களின் இதயங்களை மேலும் நொருங்கச் செய்யும் தகவலாக இது அமைந்துள்ளது.
2001ம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட மோசமான விமானப்பேரழிவாக இந்த துயரம் மிக்க சம்பவம் கருதப்படும்.
துணை விமானி சாம் லில்லே கப்டன் ஜொனதன் கம்போஸ்
சாம் லில்லே தனது திருமண நாளிற்காக காத்திருந்த இளம் விமானி, ஓடுபாதையில் தரையிறங்குவதற்கு ஒருசில நிமிடங்களிற்கு முன்னர் அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டருடன் மோதிய அமெரிக்க எயர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை செலுத்தியவர்.
நடுவானில் மோதுண்ட விமானமும் ஹெலிக்கொப்டரும் அதன் பயணித்தவர்களுடன் வேர்ஜீனியாவின் பொட்டொமக் ஆற்றில் விழுந்தன.
சாம் விமானவோட்டியாக பணிபுரிய ஆரம்பித்தவேளை நான் மிகவும் பெருமிதம் அடைந்தேன் என தெரிவிக்கின்றார் அவரின் தந்தை டிமோதி.
முகநூல் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மகனின் இழப்பு என்னை மிக மோசமாக பாதிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் என்னால் அழக்கூட முடியவில்லை உறங்க முடியவில்லை என தெரிவிக்கின்றார்.
நான் அவனை மீண்டும் பார்ப்பேன் என தெரியும் ஆனால் எனது இதயம் வேதனையால் துடிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த விமானத்தின் துணை விமானி லில்லே, எனது தனது முகநூல் பதிவில் தெரிவித்திருக்கும் தந்தை அவன் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்து விளங்கினான்.
நான் மிகவும் நேசித்த ஒருவரை இழப்பது பெரும்துயரம் என தெரிவித்துள்ள தந்தை, எனது வாழ்க்கையின் மிக மோசமான நாள் இது எனவும் தெரிவித்துள்ளார்.
துயரத்தில் சிக்குண்டுள்ள தந்தை 20 வருடங்களாக அமெரிக்க இராணுவ விமானியாக பணிபுரிந்தவர்.
பயணிகள் விமானம் சரியான நடைமுறையையே பின்பற்றியது என கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹெலிக்கொப்டரின் இராணுவ விமானி மிகப்பெரும் தவறிழைத்துள்ளார் அது என்னை காயப்படுத்தியுள்ளது ஏனென்றால் அவர்கள் எனது சகோதாரர்கள் நான் எனது மகனையும் இழந்துவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தின் தலைமை விமானியான ஜொனதன் கம்போசும் உயிரிழந்துள்ளார்.
2022 இல் கொம்போஸ் விமானத்தின் கப்டனாக பணிபுரிய ஆரம்பித்தார் என அவரை நன்கு அறிந்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் அற்புதமான மனிதன் பறப்பது அவருக்கு பிடிக்கும் குடும்பத்தை அவர் மிகவும் நேசித்தார் என அவரை பற்றியறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
அஸ்ரா ஹசைன் ராசா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் அஸ்வரா ஹசைன் ராசாவும்( 26) ஒருவர் என அவரின் மாமனார் வைத்தியர் ஹசீம் ராசா சிஎன்என்னிற்கு தெரிவித்தார்.
இந்திய வம்சாவளியினரின் மகளான இவர் 2020 இல் இந்தியானா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து 2023 ஆகஸ்ட்டில் தனது காதலனை கரம்பிடித்தார்.
ராசா வோசிங்டன் டிசியை தளமாக கொண்ட ஒரு ஆலோசகர். அவர் விசிட்டாவிற்கு மாதத்திற்கு இரண்டு முறை பயணம் செய்து அங்குள்ள ஒரு மருத்துவமனை திட்டத்தில் பணியாற்றினார் என அவரது மாமனார் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
