சட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்த பொலிஸார், சுற்றாடல் அதிகார சபை,பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் செயலாற்ற வேண்டும்

4 hours ago



சூழலை பாதுகாப்பதற்கு சட்டவிரோத மணல் அகழ்வு உடன் நிறுத்தப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைக்கு ஏற்ப பொலிஸார், சுற்றாடல் அதிகார சபை மற்றும் பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள் இணைந்து செயலாற்ற வேண்டும்"

-இவ்வாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புத்துறை பிரதியமைச்சரும், திருகோணமலை மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திர அறிவுறுத்தியுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

"எமது நாட்டில் இனி சட்டவிரோதமாக எந்தவொரு நடவடிக்கையும் இடம்பெற முடியாது.

இது சட்டத்தின் ஆட்சி, அரசாங்கத்தின் கொள்கையும் அதுதான்.

சட்டவிரோதமாக மண் அகழ்வு இடம்பெறும் இடங்களை அடையாளம் கண்டு, அது தொடர்பில் பூரணமாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ஊழலை ஒழிக்க வேண்டும்.

இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் முன்னுரிமை அடிப்படையில் இருப்பது மட்டுமன்றி அரசியலை இலக்காக கொண்டு இடம்பெறக் கூடாது"- என்றார்.



அண்மைய பதிவுகள்