இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் அறிமுக நிகழ்வு வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது.
வன்னி மாவட்டத்தில் இம்முறை தமிழ் அரசுக் கட்சி சார்பாக ப.சத்தியலிங்கம், து. ரவிகரன், கா. திருமகன், தே. சிவானந்தராசா, பா. கலைதேவன், ந. ரவீந்திரகுமார், வ. கமலேஸ்வரன், செ.டினேசன், அ. கலீபா ஹலிஸ்ரா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.