மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மரணச் சடங்கில் பங்கேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் விபத்தில் உயிரிழந்தார்.
மரணச் சடங்கில் பங்கேற்பதற்காக மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
மட்டக்களப்பு - மாமாங்கத்தைச் சேர்ந்த குகதாஸ் விஜிதா (வயது 40) என்பவரே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
உயிரிழந்த பெண்ணும் அவரின் உறவினர்களும் சிலர், உரும்பிராயில் உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் கடந்த 10ஆம் திகதி பங்கேற்றனர்.
அன்றைய தினமே வானில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பயணித்த வான் கொக்காவில் பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில் மூவர் காயமடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மூவரும் கடந்த 11ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையிலேயே குறித்த பெண் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இவரின் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.