பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி இந்துக்கள் நடத்திய பேரணியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

2 months ago



பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி இந்துக்கள் நடத்திய பிரம்மாண்ட பேரணியில்              ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.

பங்களாதேஷில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது.

இதையடுத்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜிநாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து, அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

எனினும், அங்குள்ள இந்துக்களின் வீடுகள், கடைகள், கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

துர்க்கா பூசையின் போதும் இந்தத் தாக்குதல் தொடர்ந்தது.

இந்த நிலையில், சனாதன் ஜக்ரன் மஞ்ச் சார்பில் சிட்ட காங்நகரில் உள்ள லால்டிகி மைதானத்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

சிறுபான்மையினருக்கு உரிமையை நிலை நாட்ட வலியுறுத்தியும்        பாதுகாப்பை உறுதி செய்யக்    கோரியும் நடைபெற்ற இந்தப்        பேரணியில் பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் பங்கேற்றனர். 

அண்மைய பதிவுகள்