புலிகள் அமைப்பின் மீதான தடை நீடிப்பை ஆட்சேபித்து தீர்ப்பாயத்தில் வைகோ மனு

5 months ago


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப் பைத் தடை செய்தமைக்கு எதிராக சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட தீர்ப்பாயத்தின் முன்னால் மனுச் செய்து தமது சட்டத்தரணி மூலம் முன்னிலை யாகியிருக்கின்றார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை. சட்ட விரோத நடவடிக் கைகள் தடுப்புச் சட்டத்தின் படி. சட்ட விரோத அமைப்பாக அறிவித்து. ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை 14.05.2024 அன்று, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடித்து மத் திய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டது.

அந்தத் தடை அறிவிப்பின்படி, முகாந்திரங்களை ஆராய்ந்து முடிவு செய்ய, சட்டவிரோத நடவடிக்கைகள் (குடுப்பு) சட்டப்படி, டெல்லி உயர்நீதி மன்ற நீதியரசர் மன்மீத் பிரிட்டம் சிங் அரோரா தலைமையில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட தீர்ப் பாயத்தை அமைத்து 05.06.2024 அன்று மத்திய அரசு மீண்டும் அடுத்த அரசாணை வெளிட்டது.

அத்தீர்ப்பாயம், சட்ட விரோத நடவ டிக்கைகள் தடுப்புச் சட்டப்படி, விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக ஏன் அறிவிக்க கூடாது என்பதற்கு ஏதும் காரணம் இருப்பின் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ 23.07.2024 மாலை 4 மணிக்கு இத்தீர்ப்பாயத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ சார்பில், இந்தத் தீர்ப்பாயத்தில் மனுச் செய்யப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, இந்திய ஒன்றியத்தில், தடை விதிக்க முகாந்திரம் இல்லை, ஆகவே, அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை, இந்திய ஒன்றிய அரசு இரத்து செய்ய வேண்டுமென்றும், வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், 23.07.2024 மாலை புதுடில்லியில் தீர்பாயத்தில் மனுத்தாக்கல் செய் யப்பட்டது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டது. ஓகஸ்டு 7 ஆம் திகதிக்கு விசாரணை ஓத்தி வைக் கப்பட்டது. கடந்த ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் இதே போன்ற மனுவை வைகோ நீதிமன்றத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்து இருந்தார்.

அண்மைய பதிவுகள்