சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை அமைத்துக் கொள்வதே எமது திட்டம். அமைச்சர் தெரிவிப்பு

1 month ago



பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டியதொரு                சட்டமாகும். என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

சர்வதேச சட்ட திட்டங்களுக்கு  அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு    சட் டம் ஒன்றை அமைத்துக்      கொள்வதே எமது திட்டம்.

அதனால் இந்த சட்டத்தை ஏற்படுத்தி அனுமதித்துக் கொள்ளும்வரை நாட்டில் இனவாதம், மதவாதம் தலைதூக்கும்போது அதனை அடக்குவதற்கு தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுகிறது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர் ஷன நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு                ஆளாக்கப்பட்டோம்.

ஆனால் அந்த நிலை யாருக்கும் ஏற்படும் வகையில் எமது அரசாங்கம் செயற்படாது என்பதை உறுதியாக தெரிவிக்கிறோம். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டிதொரு சட்டமாகும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

அந்த கொள்கையில் மாற்றம் இல்லை. ஆனால் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை அமைத்துக் கொள்வதே எமது திட்டம்.

அதனால் இந்த சட்டத்தை ஏற்படுத்தி அனுமதித்துக் கொள்ளும் வரை நாட்டில் இனவாதம், மதவாதம் தலைதூக்கும்போது அதனை அடக்குவதற்கு தற்போ துள்ள சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படுகிறது.

பேச்சு சுதந்திரம் ஒரு மனிதனின் அடிப்படை உரிமையாகும். அதனை நாங்கள் இல்லாமல் செய்ய மாட்டோம்.

சமூக வலைத்தலங்களில் எதனை வேண்டுமானாலும் பிரசுரிக்க உரிமை இருக்கிறது.

ஆனால் கடந்த சில தினங் களில் மாவீரர் தினத்தை அனுஷ்டித்ததாக பொய் பிரசாரங்களையும் போலி தகவல்களையும் சமூக வலைத்தளங்களில் பிரசுரிப்பது எவருடைய உரிமையும் அல்ல.

வடக்கையும் தெற்கையும் குழப்பி இனவாத யுத்தத்தை மீண்டும் ஏற்படுத்தவா இவ்வாறு செய்கிறார்கள்.

அதனால் பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பது தொடர்பில் தெரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

எனவே அரசியல் ரீதியில் நாங்கள் வேறுபட்டு ஒருவருக்கொருவர் வித்தியாசமான கொள்கையை பின்பற்றி வந்தாலும் ஜனநாயக முறையில் செயற்பட தயார்.

ஆனால் யாரேனும் அரசியல் நோக்கில் நாட்டில் இனவாதத்தை  தூண்ட நடவடிக்கை எடுத்தால் இந்த அரசாங்கம் ஒருபோதும் இனவாத, அடிப்படைவாத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை.

அதனை தோற்கடிப்போம் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன்- என்றார்.