அரசியல் பிரச்சினைக்கு மட்டுமன்றி அபிவிருத்திப் பிரச்சினைக்கும் தீர்வு வழங்குவேன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு.

3 months ago


அரசியல் பிரச்சினைக்கு மட்டுமன்றி அபிவிருத்திப் பிரச்சினைக்கும் தீர்வு வழங்குவேன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு.

தேசிய காணி ஆணைக்குழு மற்றும் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் எனவும், நவாஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்க மைவாக எதிர்வரும் 5 வருடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவ டிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம்- நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழக மைதா னத்தில் இன்று சனிக்கிழமை "ரணி லால் இயலும்" என்ற தொனிப்பொருளில் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

"வடக்கின் விடயங்களை அரசியல் பிரச்சினைகளுக்கு மாத்திரம் மட்டுப் படுத்த முடியாது. வடக்குக்கு அபி விருத்தியும் அவசியம். இல்லையெ னில் ஏனைய மாகாணங்கள் முன்னேறுகையில் வடக்கு பின்தங்கிவிடும். வடக்கின் அபிவிருத்தியைப் போன்றே அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன்."

மாகாண சபைகளை வலுப்படுத்தி அதிகாரங்களை வழங்குவது தொடர் பாக தனது கொள்கைப் பிரகடனத் தில் உள்ளடக்கியுள்ளதாகவும், மத் திய அரசுக்கு உதவும் வகையில் 9 மாகாண சிற்றரசுகளின் கீழ் அபி விருத்தி வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படும்.

முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார எவ்வாறு தென்னிலங்கையில் மாகாண சபைகளுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தார் என்பதை நினைவுகூர்ந்த ஜனாதி பதி ரணில், இன்று யாழ்ப்பாணம் வந்து மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் இந்த விடயங்கள் தொடர்பில் மக்களுக்கு உறுதிமொழி அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கடந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டிலுள்ள தமிழ், சிங்கள. முஸ்லிம் என அனைத்து மக்களும் நம்பிக்கை இழந்திருந்த நிலையில் அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குவதற்காகத் தாம் பாடு பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

"இயலும் ஸ்ரீலங்கா" திட்டத்தின் மூலம் நாட்டின் எதிர்காலம் வெளிப் படுத்தப்பட்டுள்ளது எனவும், தற் போது நாட்டின் பொருளாதார வாயி ல்கள் திறந்துள்ளன எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு ஆரம்பித்துள்ள வேலைத் திட்டத்தை வலுவாகத் தொடராவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் நேற்று விடுத்த     எச்சரிக்கையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் சுட்டிக்காட்டி னார்.

இன்னும் 3 வருடங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப் படுத்தினால் நாட்டின் பொருளா தாரத்தை மீண்டும் எவராலும் உடைக்க முடியாது எனத் தெரிவித்து சுட்டிக் காட்டிய ஜனாதிபதி, வடக்கை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமொன்று வடக்குக்கு அவசியம் எனவும், சஜித் பிரேமதாஸவிடமோ அல்லது அநுர குமார திஸாநாயக்கவிடமோ அதற்கான தீர்வு இல்லை எனவும் குறிப்பிட்டார்.

"காஸ் சிலிண்டருக்கு வாக்களி யுங்கள். தவறினாலும் காஸும் இல்லை. யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்தியும் இல்லை" எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

அண்மைய பதிவுகள்