மூளைச்சாவடைந்த ஈழ அகதிகளின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், எழுவர் மீள் வாழ்வு பெற்றனர்
மூளைச்சாவடைந்த ஈழ அகதிகளின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், எழுவர் மீள் வாழ்வு பெற்றுள்ளமை பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் விஜயகுமார்.
இவரது 19 வயதான மகன் பிரேம்குமார், கடந்த முதலாம் திகதி விபத்துக்குள்ளானார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மூலக்குளம் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர் மூளைச்சாவு அடைந் தார். அதனால் அவரது உடல் உறுப்புகளான சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் இரு கண்களை தானம் கொடுக்க அவரது பெற்றோர் முன்வந்தனர்.
அதனைத் தொடர்த்து, 5 உறுப்புகளும் அறுவைச் சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. இதன் மூலம் எழுவர் உயிர் பிழைத்துள்ளனர்.
இறந்த இளைஞர் பிரேம்குமாரால், 7 பேருக்கு உடல் உறுப்பு தானம் கிடைக்கப் பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.