கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாது தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் தீர்மானம்.

3 months ago


கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த   முன்னாள் எம்.பிக்கள் மற்றும் ஏனையோருக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதில்லையென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வவுனியாவில் நடந்த கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான யோசனையை கட்சியின் சிரேஷ்ட தலைவர் சி.வீ.கே.சிவஞானம் முன்வைத்தார்.

"நமது அரசியலில் மாற்றம் வர வேண்டுமென மக்கள்     எதிர்பார்க்கிறார்கள்.

தேர்தலில் புதியவர்கள்- இளையவர்கள் போட்டியிடவேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பு.

அதை உணர்ந்து செயற்பட வேண்டியது கட்சியிலுள்ள ஒவ்வொருவரின் கடமை.

புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக, கடந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் எம்.பிக்கள் மற்றும் ஏனை யவர்கள் இம்முறை           போட்டியிடாமலிருக்க வேண்டும்” - என்றார் சிவஞானம்.

இதன்போது சேனாதிராசா      கலையமுதன் குறுக்கிட்டு, “அப்படி வாய்ப்பளிக்கப்படாதவர்கள் மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட முயல்வார்கள்.

அந்த தேர்தல்களிலும் அவர்கள் போட்டியிடக்கூடாது" என்றார்.

இருவரது யோசனையும் மத்திய செயற்குழுவில்   ஏற்றுக்கொள்ளப்பட் டது.




அண்மைய பதிவுகள்