லீசிங் தவணையை செலுத்த தவறிய குற்றச்சாட்டில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 5 ஆயிரத் துக்கும் அதிகமான வாகனங்கள் லீசிங் நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டன.

4 months ago


லீசிங் தவணையை செலுத்த தவறிய குற்றச்சாட்டில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 5 ஆயிரத் துக்கும் அதிகமான வாகனங்கள் லீசிங் நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டன என்று லீசிங் மற்றும் கடன் வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் இவ்வாறு கையகப்படுத்தப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. இதேநேரம், லீசிங் தவணைகளை வழங்குவதாக வாகனங்களை பெற்று நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தவணைகளை சரியாக செலுத்த முடியாமால் இருப்பவர்களுக்காக சலுகைகளை வழங்குமாறு கடந்த சில நாட்களாகவே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய கூறியுள்ளார்.

நிதி நிறுவனங்களிடம் காணி மற்றும் சொத்துக்களை அடமானம் வைத்தவர்களுக்காக கடனை மீள செலுத்த டிசெம்பர் 15ஆம் திகதி வரை சலுகை வழங்க அரசாங்கம் தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டாலும் அவர்களைபொருளாதார ரீதியில் உறுதியாக்க எதுவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இதனால், எதிர்வரும் டிசெம்பர் 15ஆம் திகதியின் பின்னர் காணி மற்றும் சொத்துகளை அடமானம் வைத்தவர்கள் அவற்றை இழக்கும் அபாயம் உள்ளது. லீசிங்கில் பெற்ற வாகனங்களுக்கு மூன்று தவணைகளை வழங்க முடியாமல் போனால் அவை வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், மக்கள் பாதிக்கப் படுகிறார்கள். எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ருவன் பொத்துப்பிட்டிய தெரிவித்தார்.



அண்மைய பதிவுகள்