







யாழ்.சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறி பாடசாலை நேற்றைய தினம் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கனகராசா சிறிமோகனனால் திறந்து வைக்கப்பட்டது.
சுழிபுரம் மேற்கு கலைமகள் சனசமூக நிலையத்தின் தலைவர் வடிவேலு கோகுலநேசன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன் பொழுது விருந்தினர்கள் வடலியடைப்பு கலைவானி கலைமன்றத்தினரின் தமிழ் இனியத்துடன் வரவேற்பளிக்கப்பட்டனர்.
தொடர்ந்து சுழிபுரம் மேற்கு கலைமகள் அறநெறிப் பாடசாலை நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து சுழிபுரம் கலைமகள் சனசமூக நிலையத்தில் 50 வயதிற்கு மேற்பட்ட சமூக சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் சனசமூக நிலையத்திற்கான சந்தா பணத்தினை செலுத்தும் அங்கத்தவர்களை ஊக்குவிக்கும் முகமாக துவிச்சக்கர வண்டி குலுக்கல் சீட்டின் மூலம் வழங்கப்பட்டது.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட நபர் கிராமத்தின் பொருண்மியம் நலிந்த மாணவருக்கு துவிச்சக்கர வண்டியினை வழங்குமாறு கையளித்தார்.
விசேட கலை நிகழ்வுகளாக கலைமகள் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள்,பொன்னாலை சந்திர பரத கலாலயத்தின் திருமுறை ஆடல் நாட்டிய நிகழ்வு, அளவையூர் கலைவானி வில்லிசை குழுவின் திரு நீலகண்டர் வரலாறு வில்லிசை, சண் நாடக குழுவினரின் முட்டை நகைச்சுவை நாடகம் என்பன அரங்கேறின.
தொடர்ந்து விருந்தினர்கள் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இதன் பொழுது பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) கனகராசா சிறிமோகனன் ,சிறப்பு விருந்தினராக சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார்,கௌரவ விருந்தினர்களாக யாழ் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் சுப்பிரமணியம் உதயபாலன்,வலி.மேற்கு பிரதேச சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயரட்ணம் ஜெயராஜன் , சுழிபுரம் மேற்கு சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்,அறநெறி பாடசாலை மாணவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சுழிபுரம் மேற்கு புலம்பெயர் தேச உறவுகள் மற்றும் கிராமத்தவர்களின் நிதிப் பங்களிப்புடன் அறநெறிப் பாடசாலை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
