எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.
8 months ago

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இகிரியகொல்லேவ பகுதியில் இன்று (20) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுஸரும் அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்துள்ளது.
இந்நிலையில், எரிபொருள் பவுசரில் உள்ள எரிபொருள் வேறு ஒரு பவுசருக்கு மாற்றப்பட்டு வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
