யாழ்.இணுவில் பகுதியில், குடும்பமொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

2 weeks ago



யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இணுவில் பகுதியில், குடும்பமொன்றின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் .

ஆலயம் தொடர்பான விவகாரத்தில் ஏற்கனவே இருந்த முன்பகையே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று சொல்லப்படுகின்றது.

நபரொருவரும் அவருடைய மகனும் இணைந்தே பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த குடும்பத் தலைவர் ஒருவரும், வயோதிபப் பெண்ணும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மூன்று மாதங்களுக்கு முன்னர் அறுவைச் சிகிச்சைமூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்ணின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




அண்மைய பதிவுகள்