தமிழருக்கு நிகழ்ந்த குற்றங்களுக்கு 15 வருடம் கடந்தும் நீதியில்லை - பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவிப்பு
15 வருடங்கள் கடந்தும் ஈழத்தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்ந்த கொடூரக்குற்றங்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
குற்றங்கள் இன்று வரை நீள்கின்றது என்று பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது:-
2009இல் இடம்பெற்ற குற்றங்கள் இலங்கையில் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு பொறுப்புக் கூறல், மனித உரிமைகள், நீதியை நிலைநாட்டல் என்ற அடிப்படைகளைக் கொண்ட நிலையான அமைதிக்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் என சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறியிருந்தோம்.
ஆயினும் தமிழ்மக்களின் தாயகம், அரச பயங்கரவாத பாதுகாப்புப் படையினரால் கொடூர அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படுகின்றது.
அவர்களின் நினைவு கூரல் உரிமை கூட மறுக்கப்படுகின்றது.
இது உயிர் பிழைத்தோருக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் மிகவும் மன உளைச்சலைக் கொடுக்கின்றது.
ஈழத்தமிழர்களுக்கு 15 வருடங்கள் கடந்தும் இன்னமும் நீதி மறுக்கப்பட்டே உள்ளது எனஅறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது .