இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள், கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன

2 weeks ago



இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள், கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மருத்துவக் கப்பலொன்றும், போர்க் கப்பலொன்றும் இலங்கைக்கு அண்மையில் வந்து சென்றிருந்தன.

இதன் தொடர்ச்சியாகவே, இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான 'அபிராஜ்' மற்றும் 'வைபவ்' ஆகிய இரு போர்க் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்புகளை பலப்படுத்துவதையும், சவால்களைத் திறம்பட எதிர்கொள்வதையும் இந்தியக் கப்பல்களின் பயணம் வெளிப்படுத்துவதாக, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுக் கப்பல்கள் தொடர்பில், இறுக்கமான கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்று இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்