பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிம் முனிருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்

2 months ago



என்னை சிறையில் மோசமாக நடத்தினார்கள் இராணுவ தளபதிக்கு இம்ரான் கான் கடிதம்

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிம் முனிருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த கடிதம் அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் சிறையில் தன்னை மோசமாக நடத்தினார்கள் எனவும் சூரிய ஒளி, மின்சாரம் இல்லாமல் 20 நாள்கள் மரண தண்டனை கைதிகளுக்கான தனிமைச்  சிறையில் அடைக்கப்பட்டேன் என்றும் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கும், இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளியைக் குறைப்பது அவசியம் என்றும் இதற்கு இராணுவம் தனது அரசியலமைப்பு வரம்புகளுக்குத் திரும்ப வேண்டும் எனவும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாகிஸ்தான் இராணுவம் அரசியலிலிருந்து விடுபட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்