
பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது.
நாட்டில் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று நாடு முழுவதும் ஆரம்பமானது.
நாளை வெள்ளிக்கிழமையும் எதிர்வரும் 4ஆம் திகதியும் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
இந்த மூன்று நாட்களிலும் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் நவம்பர் 7, 8ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும்.
இந்த நிலையில், நேற்றையதினம் முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், மாவட்ட தேர்தல் அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் அடங்கலாக 11 வாக்களிப்பு நிலையங்களில் தபால் மூல வாக்களிப்பு நடை பெற்றது.
வன்னித் தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு தொகுதியில் 3 ஆயிரத்து 947 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு இந்தத் தேர்தலில் தகுதி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
