தமிழ் சமூகத்திற்கு ஆதரவாக இருப்பது பெருமிதம்.-- கனடா ஒன்டாரியோவின் எதிர்க்கட்சியின் மரிட்ஸ்டைல்ஸ் தெரிவிப்பு

1 month ago





தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகயிருப்பது குறித்து பெருமிதம் கொள்வதாக கனடா ஒன்டாரியோவின் உத்தியோகபூர்வ எதிர்கட்சியின் மரிட்ஸ்டைல்ஸ் தெரிவித்துள்ளார்.

தமிழீழ தேசிய கொடி தினத்தைக் குறிக்கும் நிகழ்வு குறித்து விடுத்துள்ள செய்தியில் இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

இன்று தமிழீழ தேசிய கொடிதினத்தில் ஒன்டாரியோவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் நாங்கள் தமிழ் சமூகத்தின் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் கௌரவிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாள் தமிழனப் படுகொலை மற்றும் முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட தமிழ் மக்கள் பல தசாப்தங்களை அனுபவித்த வன்முறைகளை நினைவுகூரும் நாளாகும்.

இந்த அட்டுழியங்கள் நினைத்துப் பார்க்க முடியாத வலியை துயரத்தை ஏற்படுத்தின அதேவேளை இது தமிழ் சமூகத்தின் உறுதிப்பாட்டையும், வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ் சமூகம் நீதி மற்றும் மனித உரிமைகளிற்கான போராட்டத்திற்கான உத்வேகத்தை அளிக்கின்ற ஒரு சமூகம்.

புதிய ஜனநாயக கட்சியினராகிய நாங்கள் தமிழ் சமூகத்திற்கு ஆதரவாகயிருப்பது குறித்து பெருமிதம் கொள்கின்றோம்,

உங்கள் கலாச்சாரம் மீள்எழுந்தன்மை மற்றும் பங்களிப்புகள் எங்கள் மாகாணமான ஒன்டாரியோவை வளப்படுத்தி,எங்கள் அனைவருக்கும் சிறந்த இடமாக்குகின்றது.

இன்றைய நாளில் நாங்கள் செய்யப்பட்ட தியாகங்களை மீள நினைவுகூருவதுடன், நீதி சமாதானம் ஆகியவற்றிற்காக மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம்.

அண்மைய பதிவுகள்