கனடிய பிரஜை ஒருவர் இராணுவ பயிற்சி எடுக்காமல் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துள்ளார்.
எனினும் குறித்த நபர் எவ்வித இராணுவ பயிற்சிகளும் பெற்றுக் கொள்ளாது இவ்வாறு உக்ரைன் படையில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய படையினருக்கு எதிரான போரில் இவ்வாறு குறித்த கனடியர் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடம் ஹோக் என்ற கனடிய பிரஜையே இவ்வாறு உக்ரைன் இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய படையினர் ஆத்து மீறல்களை மேற்கொண்ட போது தாம் உக்ரைன் படையில் இணைந்து கொள்ள வேண்டும் என தீர்மானித்ததாக ஹோக் தெரிவித்துள்ளார்.
மக்கள் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்படும் சந்தர்ப்பங்களை பார்த்தபோது வீட்டில் இருப்பதற்கு மனம் இடம் தரவில்லை எனவும் இதனால் தாம் இவ்வாறு படையில் இணைந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது உக்ரைன் படையொன்றில் இணைந்து கொண்டுள்ள ஹோக் எதிர்வரும் வாரங்களில் போரில் ஈடுபட உள்ளார்.
குறிப்பாக ட்ரோன் இயக்குபவராக ஹோக் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
34 வயதான ஹோக், டொரன்டோவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் சர்வதேச தொண்டு நிறுவனம் ஒன்றின் பணியாளராக உக்ரேனில் அவர் கடமையாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.