அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகத்தின் மீது துப்பாக்கிச்சூடு.
அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இடையே நேரடி போட்டியில் கமலா ஹாரிஸ் கருத்துக் கணிப்புகளில் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு ; கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு | America Shooting Kamala Harris Campaign Office
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரிசோனா மாகாணம் டெம்பேவில் உள்ள சதர்ன் அவென்யூ-ப்ரீஸ்ட் டிரைவ் அருகே உள்ள கமலா ஹாரிசின் பிரச்சார அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகம் மீது நள்ளிரவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடந்தபோது அலுவலகத்துக்குள் யாரும் இல்லை. சுவர்களில் தோட்டாக்களால் சேதம் ஏற்பட்டது.
முன்பக்க ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக அலுவலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கி சூடு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பொலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.