தர்மபுரம் சுண்டிக்குளம் பகுதியில் மரம் ஒன்று வேருடன் சாய்ந்ததில் வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது.
4 months ago




தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தர்மபுரம் சுண்டிக்குளம் பகுதியில் மரம் ஒன்று வேருடன் சாய்ந்ததில் வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது.
பரந்தன் முல்லைத்தீவு A-35 வீதியின் சுண்டிக்குளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மரம் வேருடன் சாய்ந்ததில் வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது மின் இணைப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது போக்குவரத்து பொலிஸார் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து குறித்த மரத்தை அகற்றி நிலைமையை வழமைக்கு கொண்டுவந்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
